Monday, 7 July 2014


ஜாலூர் கெமிலாங்

 

காற்றில்

சிறகுகளை

மெல்ல வீசியவாறு

அசைகிறது

 

பெருமித உணர்வுகள்

நாடி நரம்புகளையெல்லாம்

சலவை செய்தவாறு

 

மௌனத்தின்

அடுத்த முனைகளில்

வரலாற்றுப் பதிவேடுகளில்

புழுதிகள்

 

அரை நூற்றாண்டில்

நிரம்பி வழியும்

சுதந்திர தேசம்

 

கத்தியும்

இரத்தமும்

யுத்தமும்

சாதிக்க முடியாததை

பேனா முனைகளின்

கூர்மையில்

சாதித்தோம்

 

மெல்லிய உணர்வுகளாய்

அசையும்

காற்றின் தாளத்திற்கு

அபிநயம்

 

முன்னேற்றத்தின்

முகவரிகளை

கைநீட்டி இழுத்தவாறு

 

மூவினத்தின்

கரங்களுக்கும்

முடிச்சுப் போட்டவாறு

 

காற்றில்

சிறகுகளை

மெல்ல விரித்தவாறு

இசைக்கும் தேசிய கீதம்

எங்கள் ஜாலூர் கெமிலாங்.

 

Nukilan: En.G.Manimaran,smk mantin.

No comments:

Post a Comment